கோப்புப்படம் 
இந்தியா

கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடி: அடுத்து நடந்த ட்விஸ்ட்!

சென்னை கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடியை தவறுதலாக வங்கி நிர்வாகம் அனுப்பியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

DIN

சென்னை கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடியை தவறுதலாக வங்கி நிர்வாகம் வரவு வைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேவுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், சென்னை கோடம்பாக்கத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, வாடகை கார் ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ராஜ்குமாரின் வங்கிக் கணக்குக்கு ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக வங்கியில் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்து அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஆனால், அடுத்த 30 நிமிடங்களில் அந்த மகிழ்ச்சி முடிவுக்கு வந்தது.

முதலில், ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தியை கண்ட ராஜ்குமார் போலியாக இருக்கும் என்று நினைத்துள்ளார். பின்னர், வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணிலிருந்து செய்தி வந்திருப்பதை உணர்ந்தார்.

வெறும் ரூ.105 மட்டுமே இருந்த கணக்கில் ரூ. 9,000 கோடி இருப்பதை பார்த்த ராஜ்குமார், தனது நண்பருக்கு ரூ.21,000 அனுப்பியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது கணக்கிலிருந்த மீது தொகையை வங்கி நிர்வாகம் மீண்டும் எடுத்துக் கொண்டது.

அடுத்த நாள் காலை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்டு தவறுதலாக கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், செலவு செய்த தொகையை திரும்ப அளிக்காவிட்டால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் சில வங்கி அதிகாரிகள் பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக சென்னை திநகரில் உள்ள வங்கி கிளைக்கு வழக்கறிஞருடன் நேரில் சென்று ராஜ்குமார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த பேச்சுவார்த்தையில், ராஜ்குமார் செலவு செய்த தொகையை திரும்ப அளிக்க வேண்டாமென்றும், வங்கி சார்பில் கார் கடன் வழங்குவதாகவும் தெரிவித்து வங்கி அதிகாரிகள் சமரசம் செய்துள்ளனர்.

வங்கியின் தவறால் அரை மணிநேரம் கோடீஸ்வரராக இருந்த ராஜ்குமாருக்கு ஏமாற்றத்துக்கு பதிலாக ரூ.21,000 மிஞ்சியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT