இந்தியா

திருச்சியிலிருந்து சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து!

திருச்சியில் இருந்து ராஜஸ்தான் சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

DIN

திருச்சியில் இருந்து ராஜஸ்தான் சென்ற ஹம்சஃபர் விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

திருச்சியில் இருந்து ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகருக்கு ஹம்சஃபர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட ரயில் 2-ம் நாளான இன்று(சனிக்கிழமை) குஜராத் மாநிலம் சூரத் அருகே வல்சத் பகுதியில் சென்றபோது ரயிலின் ஒரு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சூரத்தில் இருந்து 20-25 கிமீ தொலைவில் விபத்து நிகழ்ந்துள்ளது. 

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு தீ விபத்து ஏற்பட்ட பெட்டியில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

விபத்தில் பி1 பெட்டி முற்றிலும் எரிந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக ரயில்வே துறை அதிகாரிகள், தீயணைப்புப் படையினர் ஆகியோர் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. 

ரயில்வே துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT