இந்தியா

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நாக்பூர்!

நாக்பூரில் வெள்ளம் சூழ்ந்துள்ள அம்பாஜாரி ஏரிப் பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

நாக்பூரில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்ரத்தின் உள்ள நாக்பூரின் சில பகுதிகளில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, அம்பாஜாரி ஏரி பகுதியில் சிக்கிய 6 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுவினர் சனிக்கிழமை வெளியேற்றினர்.

இந்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க ஒரு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "காலையில் தண்ணீர் தோள்பட்டை வரை இருந்தது. எங்களுக்கு தகவல் தெரிந்தவுடன், நாங்கள் ஒரு படகைக் கொண்டு வந்து, மக்களை மீட்டோம். அவர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட் வழங்கியுள்ளோம்." எனத் தெரிவித்தார்.

நாக்பூரில் நீரில் கார்கள் மூழ்கியும், சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

ஜெட் வேகத்தில் உயரும் தங்கம்! ரூ. 95 ஆயிரத்தை நெருங்கியது! வெள்ளி விலை ரூ. 206

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக வாழ்வார்கள்! டிரம்ப்

காந்தாரா சாப்டர் 1 வசூல் வேட்டை! 11 நாள்கள் விவரம்...

SCROLL FOR NEXT