ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ராகுலை வரவேற்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட். 
இந்தியா

ராஜஸ்தானில் ராகுல் காந்தி!

கட்சி விழாவுக்காக ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெயப்பூர் வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று சனிக்கிழமை ஒருநாள் பயணமாக  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்தார்.

ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் ராகுல் காந்தியை ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் ரந்தாவா, கட்சியின் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா ஆகியோர் வரவேற்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயும் ராகுல் காந்தியும் இன்று ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் புதிய மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

இதுபற்றி காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தோடஸ்ரா கூறுகையில், இந்த விழா எங்களுக்கு மேலும் பலம் சேர்க்கும், நிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT