கோப்புப்படம் 
இந்தியா

மேற்கு வங்கத்தில் 38 ஆயிரத்தைத் தாண்டிய டெங்கு பாதிப்பு!

மேற்கு வங்கத்தில் டெங்கு பாதிப்பு 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

DIN

மேற்கு வங்கத்தில் டெங்கு பாதிப்பு 38 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

திங்கள்கிழமை(செப்.25)-ம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் மொத்த பாதிப்பு 38,181 ஆக உயர்ந்துள்ளது. 

நாளுக்கு நாள் டெங்கு தொடர்பான இறப்புகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தாலும், பலியானோரின் உண்மை தகவலை சுகாதாரத்துறை வெளியிட மறுத்து வருகிறது. 

வடக்கு வங்காளத்தில் பல பகுதிகள் குறிப்பாக மால்டாவில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகின்றது. வடக்கு மற்றும் தெற்கு வங்காளத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு சிறப்பு கண்காணிப்பு வழக்கமான அடிப்படையில் நடத்தப்படுகிறது. 

மாநிலத் தலைநகரில் திடீரென அதிகரித்துவரும் பாதிப்புக்கு மத்தியில் கொல்கத்தா நகராட்சி சுகாதார மையங்களை வாரத்தில் 7 நாள்களுக்கு இயக்க முடிவு செய்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறையை ரத்து செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

குறுவட்ட போட்டிகளில் வெற்றி: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்

ஒரத்தநாடு அருகே கொலை குற்றவாளி வீட்டில் 29 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT