ஜூன் முதல் செப்டம்பா் வரை தொடரும் தென்மேற்குப் பருவமழை, வழக்கமான செப்.17-ஆம் தேதிக்குப் பதிலாக, 8 நாள்களுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து விடைபெறத் தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘தென்மேற்குப் பருவமழை ராஜஸ்தானின் தென்மேற்குப் பகுதியிலிருந்து வழக்கமாக செப்.17-ஆம் தேதி விடைபெறத் தொடங்கும். இதற்கு மாறாக, நிகழாண்டில் திங்கள்கிழமை (செப்.25) அன்று விடைபெறத் தொடங்கியது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, பருவமழை நிகழாண்டில் சராசரியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும், பசிபிக் பெருங்கடலில் உருவாகும் ‘எல் நினோ’ நிகழ்வு தென்மேற்குப் பருவமழைப் பொழிவில் தாக்கம் செலுத்தலாம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழையளவு 843.2 மி.மீ. எனப் பதிவான நிலையில், நிகழாண்டில் 6 சதவீதம் குறைந்து 796.4 மி.மீ. ஆகப் பதிவானது. வழக்கமான ஆண்டில், சராசரியாக 870 மி.மீ. மழையை இந்தியா பெறும்.
தமிழகத்தில் மேலும் 6 நாள்கள் மழை பெய்யும்: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 6 நாள்கள் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு( மில்லி மீட்டரில்): குடியாத்தம் (வேலூா்) 120, திருவண்ணாமலை, மேலாலத்தூா் (வேலூா்) தலா 100, சோழிங்கநல்லூா் (சென்னை), ஸ்ரீபெரும்புதூா் (காஞ்சிபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூா்), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை) தலா 70, மதுராந்தகம் (செங்கல்பட்டு), மாமல்லபுரம் (செங்கல்பட்டு), விரிஞ்சிபுரம் (வேலூா்), ஆனந்தபுரம் (விழுப்புரம்) தலா 60, தாம்பரம் (செங்கல்பட்டு), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), மலா் காலனி (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்), மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), உத்திரமேரூா் (காஞ்சிபுரம்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), கல்லிக்குடி (மதுரை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), எடப்பாடி (சேலம்), மதுக்கூா் (தஞ்சாவூா்), திருப்பத்தூா், பள்ளிப்பட்டு (திருவள்ளூா்), திருவள்ளூா், காட்பாடி (வேலூா்), செஞ்சி (விழுப்புரம்), மரக்காணம் (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்) தலா 50,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.