இந்தியா

ம.பி. தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத இடங்கள்: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு

மத்திய பிரதேச தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

DIN

மத்திய பிரதேச தேர்தலில் பெண்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார்.

நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அகிலேஷ் யாதவ், மத்திய பிரதேச தேர்தலில் 20 சதவீத இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார். 

மேலும் பாஜகவை கடுமையாகச் சாடிய சமாஜவாதி தலைவர், 'பாஜகவின் நோக்கம் ஒருபோதும் தெளிவாக இல்லை, பெண்கள் இடஒதுக்கீடு குறித்து பாஜக பொய் பிரசாரம் செய்து வருகிறது. வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்று கூறி, பணவீக்கம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது'  என்று கூறினார். 

தொடர்ந்து, மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை நாட்டின் ஒரு முக்கியமான தேர்தலாக மக்கள் கருத வேண்டும். இதன் முடிவுகள் நாட்டில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலும் கடல் காற்றும்... அனிதா சம்பத்!

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

ரஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT