இந்தியா

ரூ.854 கோடி இணைய மோசடி: 6 பேர் கைது!

இந்தியா முழுவதும் ரூ.854 கோடி இணைய மோசடியில் ஈடுபட்ட 6 பேரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.

DIN

இந்தியா முழுவதும் ரூ.854 கோடி இணைய மோசடியில் ஈடுபட்ட 6 பேரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியா முழுவதும் முதலீட்டுத் திட்டத்தைக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கானவர்களிடமிருந்து இதுவரை சுமார் ரூ.854 கோடி இணைய மோசடி மூலம் ஏமாற்றியுள்ளனர். ஏமாற்றப்பட்ட மொத்த தொகையில், முதல்கட்டமாக ரூ.5 கோடி முடக்கப்பட்டுள்ளது. 

குற்றம் சாட்டப்பட்ட கும்பல் பாதிக்கப்பட்டவர்களை வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் மூலம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளனர். தொடக்கத்தில் ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ.5,000 வரை லாபம் ஈட்டுவார்கள் எனக் கூறி 1,000 முதல் 10,000 வரை முதலீடு செய்யும்படி கேட்கப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் ரூ.1 லட்சம் முதல் 10 லட்சம் வரையும் அதற்கு மேலும் முதலீடு செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் முதலீடு செய்த பணம் ஆன்லைன் மூலம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. 

முதலீடு செயல்முறையை முடித்தபிறகு, பாதிக்கப்பட்டவர்கள் தொகையைத் திரும்பப்பெற முடியவில்லை. 

கிரிப்டோ (பைனான்ஸ்), பேமென்ட் கேட்வே, கேமிங் ஆப்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் பேமெண்ட் முறைகளில் மொத்தம் ரூ.854 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT