முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசம்: பாஜக 137, காங்கிரஸ் 54 இடங்களில் முன்னிலை!

மத்தியப் பிரதேசத்தில் பாஜக 137 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

Updated On : 3 டிசம்பர், 2023 at 10:44 AM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:50 PM

மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 137 இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் முன்னிலையில் நீடித்து வருகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குகளின் அடிப்படையில் காலை 10.30 மணி நிலவரப்படி மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

Advertisement

மத்தியப் பிரதேசத்தின் மேற்கு தொகுதிகளில் பாஜக அதிக இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் 116 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கும் நிலையில், பாஜக 137 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.