முகப்பு
இந்தியா

ஞானவாபி மசூதி ஆய்வு: 8 வாரங்கள் அவகாசம் கோரும் தொல்லியல் துறை!

மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே வழங்கப்பட்ட 4 வார கால அவகாசம் இன்றுடன் (செப். 2) முடியவுள்ள நிலையில், தொல்லியல் துறையினர் மேலும் அவகாசம் கோரியுள்ளனர்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:56 AM
ஞானவாபி மசூதி
பகிர்:


வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொண்டுவரும் தொல்லியல் துறையினர் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க மேலும் 8 வார காலம் அவகாசம் கோரியுள்ளனர். 

மசூதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே வழங்கப்பட்ட 4 வார கால அவகாசம் இன்றுடன் (செப். 2) முடியவுள்ள நிலையில், தொல்லியல் துறையினர் மேலும் அவகாசம் கோரியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள அனுமதி அளித்து அலாகாபாத் உயா்நீதிமன்றம் (ஆகஸ்ட்) கடந்த 3ஆம் தேதி உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து மசூதியில் சிவலிங்கம் உள்ளதாக சீலிடப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைந்துள்ள பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் பள்ளம் தோண்டாமல் ஆய்வுப் பணிகளை தொல்லியல் துறை மேற்கொண்டு வந்தது.

பள்ளம் தோண்டக்கூடாது என்பதற்காக ரேடார் கருவிகளையும் தொல்லியல் துறை பயன்படுத்தியது.

இந்நிலையில், மேலும் ஆய்வு செய்யவும், அறிக்கை சமர்ப்பிக்கவும் கூடுதலாக 8 வாரங்களை அவகாசமாக அளிக்குமாறு தொல்லியல் துறை கோரியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →