இந்தியா

கேரளம்: ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

DIN

கேரளத்தில் கோழிக்கோடு ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த வழக்கில் தில்லியைச் சேர்ந்த இளைஞர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

கேரள மாநிலத்தில் ஆலப்புழா - கன்னூர் இடையே இயக்கப்பட்ட விரைவு ரயிலில், கடந்த ஏப்ரல் மாதம்  ஒரு குழந்தை உள்பட 3 பேரை இளைஞர் ஒருவர் தீ வைத்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 

புதுதில்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் வசித்து வந்த ஷாருக் சைஃபி என்ற ஷாருக் மீது, இந்திய தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், ரயில்வே சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ், தீவிர இஸ்லாமியர்களின் ஆன்லைன் பிரசாரத்தைப் பின்பற்றி தீவிரவாத சிந்தனைகளுக்கு உள்ளானவர் என்று குற்றம்சாட்டப்பட்டவர் குறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 2ஆம் தேதி, 27 வயதாகும் குற்றவாளி, ஓடும் ரயிலில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவத்தில் மூன்று பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தில், ஒரே குற்றவாளியாக கண்டறியப்பட்டிருக்கும் ஷாரூக், பயணிகள் மீது மண்ணெண்ணெய்யை தெளித்து, லைட்டரைக் கொண்டு தீ வைத்ததாகவும், அவர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு செயல்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை தெரிவிப்பதாக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் பயங்கரவாத அச்சத்தை ஏற்படுத்துவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும், இந்தக் குற்றத்தை செய்துவிட்டு தப்பித்து மீண்டும் தில்லி திரும்பி இயல்பு வாழ்க்கை வாழ திட்டமிட்டிருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலில் கேரள மாநிலம், கோழிக்கோடு ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் கேரள சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

மும்பை: தாராவியில் பெரும் தீ விபத்து - 6 பேர் காயங்களுடன் மீட்பு

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து!

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தல்

தில்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT