மும்பை: மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில், மகாராஷ்டிரத்தின் முக்கிய ஐந்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
மகாராஷ்டிரத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் 5 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாஜக 4 இடங்களை கைப்பற்ற இலக்கி நிர்ணயித்துள்ளது.
நாக்பூர் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ விகாஸ் தாக்ரேவை எதிர்த்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போட்டியிடுகிறார். மற்ற நான்கு தொகுதிகளாக ராம்டெக் (தனி), சந்திராபூர், கட்சிரோலி-சிமூர் (தனி) மற்றும் கோண்டியா-பண்டாரா ஆகியவையாகும்.
இந்த ஐந்து தொகுதிகளும் மொத்தம் 11 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட வறண்ட பகுதியான விதர்பாவுக்குள் அடங்கியுள்ளன. 2019 இல் சந்திராபூரில் காங்கிரஸ் வெற்றி பெற்றது, ஐந்தில் ஒரே தொகுதியில் மட்டும் சுரேஷ் நாராயண் தனோர்கர் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஹன்ஸ்ராஜ் அஹிரை தோற்கடித்தார்.
காங்கிரஸ் வேட்பாளரின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி பிரதிபாவை கட்சி முன்மொழிந்துள்ளது. இவர் மாநில அமைச்சரான பாஜகவின் சுதிர் முங்கந்திவாரை எதிர்கொள்கிறார். வேட்புமனு தாக்கல் முடிந்து, போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர், பெண் வாக்காளர்களின் ஆதரவு மற்றும் அனுதாபத்தின் அடிப்படையில் வெற்றி பெறுவார் என கட்சி தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. முங்கந்திவார் ஆளும் கட்சியின் வளர்ச்சியைக் காட்டி வாக்கு சேகரித்து வருகிறார்,
விதர்பா காங்கிரஸின் கோட்டையாக இருந்தது, ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களில் பாஜக அதைக் கைப்பற்றியது. "இரு கட்சிகளும் இந்த தொகுதிகளை மிகச் சவாலானதாகவே பார்க்கின்றன. பாஜக வென்ற தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் தனது கோட்டையாக இருந்ததை மீண்டும் கைப்பற்ற எல்லாவற்றையும் செய்து வருகிறது.
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் விதர்பாவில் துவண்டுபோயிருந்த காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. மறுபக்கம், பா.ஜ.க.வின் படைப்பலம் தங்களது இடத்தை தக்கவைக்க கடுமையாக உழைத்து வருகிறது.
இந்த ஐந்து இடங்களும் காங்கிரஸுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் அவற்றில் இரண்டு தனி தொகுதிகள். இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த காலங்களில் காங்கிரஸ் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. “2014ல், பாஜக வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசம் சராசரியை விட சற்று அதிகமாக இருந்தது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள், காங்கிரஸின் முற்போக்கான சித்தாந்தத்திற்கு விதர்பாவின் வாக்குகள் முக்கியமானவை”என்று தேர்தல் பார்வையாளர் கருதுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.