இந்தியா

ஆதாரங்களை அழிக்கக்கூடாது: சஞ்சய் சிங்குக்கு நீதிமன்றம் உத்தரவு!

PTI

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஆதாரங்களைக் கலைக்கவோ, சாட்சியங்களை அழிக்கவோ கூடாது என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங்குக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்குக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஜாமீன் வழங்கியது. ஜாமீன்

உத்தரவைப் பிறப்பிக்கும் முன் சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா வழிகாட்டுதல்களை வழங்கினார்.

அதேசமயம் கடவுச்சீட்டை(பாஸ்போர்ட்) சமர்ப்பிக்கவும், நாட்டை விட்டு வெளியேறும் முன் பயணத்திட்டம் பற்றித் தெரிவிக்கவும், அவரது தொலைபேசி எப்போதும் செயல்பாட்டில் வைக்கவும் என்று நீதிபதி சஞ்சய் சிங்கிற்கு உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி உத்தரவாதமாக இருப்பார் என்று சிங்கின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், 2 லட்சத்துக்கான சொந்தப் பத்திரம் மற்றும் அதே தொகைக்கான ஜாமீன் ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு சஞ்சய் சிங்கிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தில்லி கலால் கொள்கையை வகுத்ததிலும், அதனை அமல்படுத்தியதாலும் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அமலாக்கத் துறையினரால் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT