தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்  கோப்புப் படம்
இந்தியா

பிரதமர் மோடி சொல்வது ஒன்று, செய்வது ஒன்று: தேஜஸ்வி விமர்சனம்

DIN

பிரதமர் நரேந்திர மோடி சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் உள்ளதாக பிகார் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை பிகார் மாநிலத்தில் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, வாரிசு அரசியல் குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய தேஜஸ்வி யாதவ், மாநிலத்தில் பிரசாரம் செய்யும்போது வாரிசு அரசியல் குறித்து பிரதமர் மோடி விமர்சித்து பேசுகிறார். ஆனால், அவர் பிகாரில் தனது முதல் பிரசாரத்தையே வாரிசு வேட்பாளரை ஆதரித்து செய்கிறார். இதுவே அவரின் பேச்சுக்கும் நடத்தைக்கும் வேறுபாடு உள்ளதைக் காட்டுகிறது. பாஜகவில் இணையும் தலைவர்கள் மீதுள்ள அமலாக்கத் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு வழக்குகள் அனைத்தும் மூடி மறைக்கப்படும். 7 ஆயிரம் கோடி ஊழல் செய்தவர்களெல்லாம் அமைச்சராக்கப்படுகின்றனர். அவர்கள் மீதுள்ள வழக்குகளும் மறைக்கப்படுகின்றன. ஆனால், பாஜகவில் இணைய மறுப்பவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் எனக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT