முகப்பு
இந்தியா

பாஜகவில் இணைந்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

அபிஜீத் கங்கோபாத்யாய உள்பட 4 பாஜக தலைவர்கள் மத்திய தொழில்படை பாதுகாப்பு.

Updated On : 3 ஏப்ரல், 2024 at 3:08 AM
கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய
பகிர்:

பாஜகவில் இணைந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாயவுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்த அபிஜீத் கங்கோபாத்யாய பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், மத்திய தொழில்படை வீரர்கள் அடங்கிய ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அபிஜீத்துக்கு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், திரிணமூல் காங்கிரஸின் முன்னாள் எம்பி அர்ஜூன் சிங்குக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு, பாஜக தலைவர்கள் அபிஜித் பரமன் மற்றும் தபாஸ் தாஸ் ஆகியோருக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பாஜக தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறையின் தகவலை தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →