முகப்பு
இந்தியா

ரத்த வெள்ளத்தில் மனைவி, மகள்: கணவரின் கொடூரம்!

குடும்ப வன்முறையின் உச்சகட்டம்: கணவரின் கைகளில் மனைவி, மகள் மரணம்

Updated On : 5 ஏப்ரல், 2024 at 11:01 AM
மாதிரி படம்
பகிர்:

42 வயதான ஆண், தன் மனைவி மற்றும் மகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து உயிரிழந்ததாக வெள்ளிக்கிழமை தில்லி காவலர்கள் தெரிவித்தனர்.

தில்லியில் உள்ள நிஹால் விஹார் பகுதியில் வசித்துவந்த அஜய், தீனா (38) அவர்களின் மகள் வர்ஷா ஆகியோரின் உடல் உள்புறமாக தாழிடப்பட்ட வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அவரது மகன் தன் குடும்பத்தினர் இறந்ததை முதலில் பார்த்துள்ளார். வேலை காரணமாக வெளியே சென்று வெள்ளிக்கிழமை காலை அவர் வீடு திரும்பியுள்ளார்.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள் அஜய் மின்விசிறியில் தூக்கு மாட்டியிருப்பதையும் அவரது உடைகளில் ரத்த கறை இருப்பதையும் கண்டுள்ளனர்.

மனைவி மற்றும் மகள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அஜய் இனிப்பு வகைகள் சமைப்பவராக பணியாற்றியுள்ளார். அவரது மகன் மின்சார வேலைகள் செய்பவர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து மேற்கொண்டு வருவதாக காவலர்கள் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →