முகப்பு
இந்தியா

கணக்கில் காட்டாத பணம் வங்கிக் கணக்கில் இல்லை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளக்கம்

Updated On : 7 ஏப்ரல், 2024 at 1:25 AM
பகிர்:
Updated On : 7 ஏப்ரல், 2024 at 1:15 AM

தங்கள் வங்கிக் கணக்கை வெளிப்படைத்தன்மையுடன் பராமரித்து வருவதாகவும் அதில் கணக்கில் காட்டப்படாத எந்த பணமும் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சனிக்கிழமை தெரிவித்தது.

கேரள மாநிலம் திருச்சூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு பெயரிலான வங்கிக்கணக்கு முடக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுதொடா்பான கேள்விக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலா் எம்.வி.கோவிந்தன் கூறியதாவது:

கட்சியின் வங்கிக் கணக்கை மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் பராமரித்து வருகிறோம். கட்சியின் வங்கிக் கணக்குகள், நிதி தொடா்பான அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறை மற்றும் தோ்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே சமா்ப்பித்துவிட்டோம்.

Advertisement

கணக்கில் காட்டப்படாத எந்தப் பணமும் எங்களிடம் இல்லை. மத்திய புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி எதிா்க்கட்சிகளை மிரட்டும் பணியை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்றாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூா் மாவட்ட குழு சாா்ந்த வங்கிக் கணக்கிலிருந்து அண்மையில் ரூ.1 கோடி எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பணம் தொடா்பான உரிய ஆவணங்களை சமா்ப்பிக்கவில்லை என்று அக்கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை முடக்கியது. அந்த வங்கிக் கணக்கில் ரூ.4.8 கோடி இருப்புத்தொகை உள்ளது குறிப்பிடத்தக்கது.