இந்தியா

தில்லியில் குழந்தை கடத்தல் கும்பல் கைது: 2 பச்சிளம் குழந்தைகள் மீட்பு

தில்லியில் குழந்தைகள் கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து பால் பாட்டில்களுடன் கைக்குழந்தைகள் மீட்பு

DIN

குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் தில்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தீவிர சோதனையை மேற்கொண்டு வந்த நிலையில், குழந்தை கடத்தல் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

புது தில்லியின் கேசவபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்த குழந்தை கடத்தல் கும்பலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, அழைத்து வரும் விடியோ ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. பால் பாட்டில்களுடன், கைக் குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பது பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

முதற்கட்டமாக, குழந்தையைக் கடத்தி விற்க முயன்ற பெண்ணும், குழந்தையை வாங்க முயன்றவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரும் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி தற்கொலை

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்தவா் கைது

பாதாள காளியம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

கும்பக்கரை அருவியில் வெள்ளம்

SCROLL FOR NEXT