இந்தியா

வங்கக் கடலில் மீன்பிடி படகில் தீவிபத்து: காயமடைந்த 9 மீனவர்களை மீட்ட கடலோர காவல்படை

Sasikumar

ஆந்திர கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல்படை பலத்த தீக்காயங்களுடன் இருந்த ஒன்பது மீனவர்களைக் பத்திரமாக மீட்டது.

ஆந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகு மார்ச் 26ஆம் தேதி காக்கிநாடா துறைமுகத்திலிருந்து ஒன்பது மீனவர்களுடன் புறப்பட்டது. கடந்த 5 ஆம் தேதி படகில் தீ விபத்து ஏற்பட்டதில், படகில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. அதில் 9 மீனவர்களும் தப்பிக்க தண்ணீரில் குதித்தனர்.

இருப்பினும் இந்த சம்பத்தில் சிலருக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன. வெடித்ததால் சேதமடைந்த மீன்பிடி படகு சில நிமிடங்களில் அந்த இடத்தில் மூழ்கியது. தீ விபத்து பற்றிய தகவல் அருகிலுள்ள படகு மூலம் கடலோர காவல்படை கப்பலுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஐ.சி.ஜி.எஸ் வீரா, அதிவேகத்தில் சென்று சில மணி நேரங்களுக்குள் அந்த இடத்தை அடைந்து மீனவர்களுக்கு உதவி வழங்கியது. பின்னர் மீனவர்கள் அனைவரும் ஐ.சி.ஜி கப்பலுக்கு மாற்றப்பட்டனர், அங்கு அவர்களுக்கு மருத்துவக் குழு முதலுதவி அளித்தது.

இதற்கிடையில், கடலோர காவல்படை மாவட்ட தலைமையகம், விசாகப்பட்டினம் மீன்வளத் துறையுடன் ஒருங்கிணைந்து, படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம், மேல் சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்திய கடலோர காவல்படை கப்பலின் துரித நடவடிக்கை காரணமாக, முழு மீட்பு பணியும் ஆறு மணி நேர குறுகிய காலத்திற்குள் முடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

MKStalin vs Vijay | TKS Elangovan நேர்காணல் | MKStalin | vijayakanth | DMK | TVK

கலர் கலராக, ஸ்டைலாக முடி‌ இருந்தால் வேலை கிடைக்காது! மாணவர்களுக்கு அறிவுரை! | Tanjore

Dmk vs Bjp | TKS Elangovan நேர்காணல் | MKStalin | CPRadhakishnan

தீவிர அரசியலில் களமிறங்கும் விஜய்! சுற்றுப்பயணம் எப்போது? | செய்திகள் சில வரிகளில் | 04.09.2025

SCROLL FOR NEXT