மாதிரி படம் 
இந்தியா

முதுகலை படிப்புக்கான சியுஇடி தேர்வு முடிவுகள்- இன்று வெளியீடு?

முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகலாம் என யுஜிசி தலைவர் அறிவிப்பு

DIN

வருகிற 2024-25 கல்வியாண்டில் முதுகலை மேற்படிப்பில் சேர்வதற்கான பொது பல்கலைக்கழக நுழைவு (சியுஇடி-பிஜி) தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்படலாம் என பல்கலைக்கழக மானிய குழுவின் தலைவர் எம் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்“தேசிய தேர்வாணையம் (என்டிஏ) சியுஇடி-பிஜி தேர்வுக்கான முடிவுகளை வெள்ளிக்கிழமை இரவு வெளியிடவுள்ளது. இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் முதுகலை மேற்படிப்பு சேர இந்த தேர்வின் மதிப்பெண்கள் உதவும். இந்த தேர்வை எழுதியவர்களுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்தார்.

மார்ச் 28-ல் நடைபெற்ற சியுஇடி-பிஜி தேர்வை நாடு முழுவதும் 4.62 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளார்கள். இதுவரை இல்லாதளவு மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் தேர்வு எழுதியாக ஜகதீஷ் குமார் குறிப்பிட்டார்.

இந்தியா முழுவதும் 250 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 9 இடங்களில் 15 நாள்கள் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் முதுகலை படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாக சியுஇடி 2022-ல் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT