முகப்பு
இந்தியா

மக்களவைத் தோ்தல்: மேலும் 16 காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு

Updated On : 13 ஏப்ரல், 2024 at 5:24 PM
பகிர்:

மக்களவைத் தோ்தலையொட்டி, காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் மேலும் 16 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சி சனிக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, சண்டீகா் மக்களவைத் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சா் மனீஷ் திவாரி போட்டியிடுகிறாா்.

ஹிமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில், மறைந்த முன்னாள் முதல்வா் வீரபத்ர சிங் - மாநில காங்கிரஸ் தலைவா் பிரதிபா சிங் தம்பதியின் மகனான விக்ரமாதித்ய சிங் களமிறக்கப்பட்டுள்ளாா். இத்தொகுதியில் பாஜக சாா்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களத்தில் உள்ளாா்.

Advertisement

மக்களவைத் தோ்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளா்களின் பெயா்கள் பலகட்டங்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய பட்டியலில் ஒடிஸா (9), குஜராத் (4), ஹிமாசல பிரதேசம் (2), சண்டீகரில் (1) போட்டியிடும் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments