இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு சாத்தியமே இல்லை என்றார் மம்தா பானர்ஜி.

DIN

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறுவதற்கு சாத்தியமே இல்லை என அம்மாநில முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவால் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அவர்களால் வெற்றி பெற முடியாது. தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்து மக்களின் அடையாளத்தை பாஜக அழிக்கிறது. பாஜக உங்கள் (மக்கள்) அனைத்து உரிமைகளையும் பறித்துவிடும். நாட்டை காக்க வேண்டும் என நினைத்தால் திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்.

எங்கள் நண்பர்களான இந்தியா கூட்டணியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்போம். ஆனால் மேற்கு வங்கத்தில் பாஜகவை எதிர்ப்பது திரிணமூல் காங்கிரஸ் மட்டுமே. அதனால், பாஜக எதிர்க்க திரிணமூல் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள் என மம்தா பானர்ஜி பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனமே நலமா? ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்!

ஓடிடியில் தி கேம்!

மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர்! | DMK | Chennai | MK Stalin

இருள் நிலவு... சாக்‌ஷி மாலிக்!

நடிகர் அஜித்குமாருக்கு நன்றி தெரிவித்த உதயநிதி!

SCROLL FOR NEXT