அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை?
இந்திய அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் பாஜகவுக்கு இல்லை: தேஜஸ்வி யாதவ்
இந்திய அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம் பாஜகவுக்கு இல்லை என பிகார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அது குறித்து மீண்டும் மீண்டும் பேசிவருகிறது.
பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பு இது. ஹிந்து மதத்தைச் சேர்ந்த யரோ ஒரு பாபா எழுதியது அல்ல. இதனை மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
Advertisement
Advertisement
பிகார் மாநிலத்திலும் பாஜகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அரசியலமைப்பை நீங்கள் அழிக்க நினைத்தால், மக்கள் உங்களை அழித்துவிடுவார்கள் எனக் குறிப்பிட்டார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.