கோப்புப்படம் 
இந்தியா

2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது வெப்ப அலை இருக்குமா?

2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது வெப்ப அலை இருக்குமா என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

DIN

நாடு முழுவதும் 102 மக்களவைத் தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப். 19 ஆம் தேதி நடைபெற்றது. அந்த நேரத்தில் வெப்ப அலை வாட்டி வதைத்தது.

இந்த நிலையில், 2-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது, அதிக வெப்ப நிலை நிலவக்கூடும் என்பதால் தேர்தல் ஆணையம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தேர்தல் கால வானிலை முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள், இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர், 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளில் பெரிய அளவில் வெப்ப அலை நிலவாது என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தெரிவித்தார்.

மேலும், அதிக வெப்ப அலை ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய சுகாரத்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

2-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 12 மாநிலங்களில் வரும் ஏப். 26 ஆம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT