மிர்துளா கத்தேரியா ஐஏஎன்எஸ்
இந்தியா

கணவருக்கு எதிராக போட்டியிடும் மனைவி: சுவாரசிய தேர்தல் களம்!

எட்டாவா தொகுதியில் கணவன்-மனைவி மோதல்!

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா தொகுதியில் நடப்பு எம்பியான ராம் சங்கர் கத்தேரியா இந்த முறையும் மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக கத்தேரியாவின் மனைவி மிர்துளா கத்தேரியா சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்.

புதன்கிழமை எட்டாவா தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ராம் சங்கர் தாக்கல் செய்தார். அதே நாளில் அவரது மனைவியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019-ல் இதே போல மிர்துளா மனு தாக்கல் செய்த போதும், பின்னர் திரும்ப பெற்றார்.

இந்த முறை திரும்ப பெறுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவிக்கும் மிர்துளா, “இது ஜனநாயக நாடு. இங்கு அனைவரும் சுதந்திரமானவர்கள். யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். நான் என் கணவருக்கு எதிராக நிற்கிறேன். அவர் எனக்கு எதிராக போட்டியிடுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

ராம் சங்கர் கத்தேரியா அதே தொகுதியில் மூன்றாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவர் ஒன்றிய அமைச்சராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கம்: எஸ்ஐஆா் பணியில் ‘ஏஐ’

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

விஜய்யிடம் கணிசமான வாக்குகள் இருந்தாலும் அவை திமுக கூட்டணியைப் பாதிக்காது: காா்த்தி ப. சிதம்பரம்

பவளப்பாறை பயன்கள் குறித்து மீனவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT