இந்தியா

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

DIN

உத்தரபிரதேசம்: பிகாரில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 95 குழந்தைகளை உத்தரபிரதேச மாநில குழந்தைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக அயோத்தி குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் சர்வேஷ் அவஸ்தி கூறுகையில், உ.பி குழந்தைகள் ஆணைய உறுப்பினர் சுசித்ரா சதுர்வேதி வெள்ளிக்கிழமை காலை பிகாரில் இருந்து சஹரன்பூருக்கு சட்டவிரோதமாக குழந்தைகள் கடத்தப்பட்டு வருவதாகவும், அவர்கள் கோரக்பூரில் இருப்பதாகவும், அயோத்தி வழியாகச் செல்வதாக தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கோரக்பூரில் அயோத்தி செல்லும் வழியில் சோதனையில் ஈடுப்பட்டிருந்த குழந்தைகள் ஆணையம் குழுவினர் வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் குழந்தைகளை ஏற்றி வந்த பேருந்தை நிறுத்தி குழந்தைகளை மீட்டனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது மற்றும் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட குழந்தைகள் 4-12 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் என்பது கூட தெரியவில்லை அவர் கூறினார்.

"குழந்தைகளை அழைத்து வந்தவர்களிடம் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் எதுவும் இல்லை. பெற்றோர்களை தொடர்பு கொண்டு குழந்தைகள் ஒப்படைக்கப்படுவார்கள் என்று சர்வேஷ் அவஸ்தி கூறினார்.

பெற்றோரின் ஒப்புதலின்றி குழந்தைகள் எதற்காக பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆரியபாளையம் அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

மாணவா்களுக்கு பாராட்டு விழா

பைக் மீது காா் மோதி தம்பதி உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

SCROLL FOR NEXT