கோப்புப் படம் 
இந்தியா

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

ராஜஸ்தானில் நீட் தேர்வு அழுத்தத்தால் மீண்டும் ஒரு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ராஜஸ்தானில் நீட் தேர்வு அழுத்தத்தால் மீண்டும் ஒரு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது தந்தைக்கு உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர்.

அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலம் தோல்புரா பகுதியிலிருந்து சென்று கோட்டா நகர விடுதியில் தங்கி நீட் தேர்வுக்கு தயாராகிவந்த பாரத் குமார் ராஜ்புத். இவர் இதற்கு முன்பு இருமுறை நீட் தேர்வு எழுதியுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக மே 5ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை எழுத தயாராகிவந்துள்ளார்.

இந்நிலையில், விடுதி அறையில் உள்ள மின்விசிறியில் பாரத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பாரத்தின் உறவினரான ரோஹித் அவருடன் தங்கியிருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அறையை திறக்காததால் சந்தேகமடைந்த ரோஹித் சன்னல் வழியாக பார்த்தபோது தூக்கிட்ட நிலையில் பாரத் இருந்துள்ளார்.

இதனையடுத்து தகவலறிநது வந்த காவல் துறையினர் பாரத் குமாரின் உடலைக் கைப்பற்றி அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தோல்புராவிலுள்ள அவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரத் குமாரின் அறையிலிருந்து ஒற்றை வரி குறிப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், ''மன்னித்துவிடுங்கள் அப்பா, இம்முறையும் என்னால் நீட் தேர்வை சரியாக எழுத முடியாது'' என உருக்கமாக பாரத் குமார் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வு அழுத்தம் காரணமாகவே பாரத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதல்கட்ட விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோட்டா பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களில் இது 9வது தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

எம்எல்எஸ் தொடரில் முதல்முறை... வரலாறு படைத்த மெஸ்ஸி!

கூர்விழி... தர்ஷா!

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை உறுதி: தேஜஸ்வி யாதவ் மீண்டும் வாக்குறுதி

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

SCROLL FOR NEXT