இந்தியா

அரசின் அனுமதி பெற்றே முஸ்லிம்கள் சொத்து வாங்க முடியும்! -அஸ்ஸாம் அரசு

ஹிந்துக்களும் அரசின் அனுமதி பெற்றே முஸ்லிம்களிடமிருந்து சொத்துக்களை வாங்க முடியும் - அஸ்ஸாம் அரசு

DIN

பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் இனி, அரசின் அனுமதி பெற்றே சொத்துக்களை வாங்க முடியும் என்கிற வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அஸ்ஸாம் தலைநகர் குவாஹாத்தியில் இன்று(ஆக. 4) நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் பேசிய அவர், “லவ் ஜிஹாத்துக்கும், நில அபகரிப்பையும் தடுத்து நிறுத்த அஸ்ஸாம் அரசு 2 சட்டங்களை கொண்டு வருகிறது. அதன்படி, ஹிந்துக்களின் சொத்துக்களை ஒரு முஸ்லிம் வாங்க விரும்பினால், அதேபோல, முஸ்லிம்களின் சொத்துக்களை ஒரு ஹிந்து வாங்க விருப்பப்பட்டாலோ அதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம்.

லவ் ஜிஹாத் செய்வோர் வாழ்நாள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். அஸ்ஸாமில் பிறந்தவர்கள் மட்டுமே இங்கு அரசுப் பணிகளில் சேர முடியும்” எனப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

லஹ் ஜிஹாத் போன்ற கட்டாய மதமாற்ற முறைகளுக்கு எதிராக பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் சட்டம் உள்ளது. இந்த சட்டங்களின் மூலம் தண்டனையை கடுமையாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அஸ்ஸாமில் மேற்கண்ட மசோதாக்கள் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள பருவகால கூட்டத்தொடரின்போது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுமென தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸில் கடுமையாக தாக்கிக் கொண்ட போட்டியாளர்கள்! யாருக்கெல்லாம் ரெட் கார்டு?

பிகாரில் பெண்களின் நலத்திட்டங்களை நிறுத்த ஆர்ஜேடி முயற்சி: ஸ்மிருதி ராணி!

சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்தது! ஐடி, ஆட்டோ பங்குகள் சரிவு!

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

SCROLL FOR NEXT