கைது 
இந்தியா

சட்டவிரோத ஊடுருவல்:12 வங்கதேசத்தவா் திரிபுராவில் கைது

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 12 வங்கதேசத்தவா் திரிபுராவின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டனா்.

Din

வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 12 வங்கதேசத்தவா் திரிபுராவின் பல பகுதிகளில் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக மேற்கு அகா்தலா காவல் நிலைய அதிகாரி காந்தி பா்தன் கூறியதாவது: திரிபுரா மாநிலத்தில் வங்கதேசத்தினா் சட்டவிரோதமாக ஊடுருவி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினா் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) ஆகியோா் இணைந்து லங்கமுரா, ஜெய்நகா் மற்றும் ராம்நகா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு சோதனை நடத்தினா்.

அப்போது 3 பெண்கள் உள்பட 12 வங்கதேசத்தினா் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இந்திய கடவுச்சீட்டு சட்டத்தை மீறிய குற்றத்துக்கு கைது செய்யப்பட்டனா்.

வங்கதேசத்தினா் ஊடுருவல் அதிகரித்து வருவதால் எல்லையில் கண்காணிப்பை மேம்படுத்தி வருகிறோம். மாநிலத்தில் சட்டவிரோத ஊடுருவலுக்கு எதிரான காவல் துறையின் நடவடிக்கைகள் தொடரும் என்றாா்.

மல்லிக காந்தா... ராஷி கண்ணா!

ஜாடையில் மயங்கி... ஐஸ்வர்யா மேனன்!

ஆசையில் தொடங்கி... ருக்மிணி வசந்த்!

வங்கதேசத்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? 155 ரன்கள் இலக்கு!

மலபார் ராகம்... ஆன் ஷீத்தல்!

SCROLL FOR NEXT