குழந்தை (கோப்புப் படம்)
இந்தியா

தில்லி: சிதைந்த நிலையில் குழந்தையின் உடல் கண்டெடுப்பு!

இறந்த குழந்தையின் உடலை நாய்கள் குதறிய கொடுமை

DIN

தில்லியில் இறந்த குழந்தையை வீசிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தில்லியில் இறந்தநிலையில் பிறந்த குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள், ரோகிணி பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த தெருநாய்கள் குழந்தையின் உடலைக் கடித்துள்ளன. நாய்கள் கடித்ததில், குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத குழந்தையின் உடல் பாகங்களை, தெருநாய்கள் கவ்விக் கொண்டு திரிவதாகக் கூறி, காவல்நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், முழுவதுமாக சிதைந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். இருப்பினும், நாய்கள் கடித்ததில் குழந்தையின் பாலினத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தையை வீசிய அடையாளம் தெரியாத நபர்களின்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றத்திற்கு குறைந்தது 2 ஆண்டுகள் முதல் சிறைத் தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

SCROLL FOR NEXT