அண்ணா பல்கலைக்கழகம் Center-Center-Chennai
இந்தியா

பொறியியல் கல்லூரிகளில் 676 பேராசிரியர்கள் மோசடி: ஒருவர் 22 கல்லூரிகளில் முழு நேர பேராசிரியர்!

பொறியியல் கல்லூரிகளில் 676 பேராசிரியர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுளள்து.

இணையதளச் செய்திப் பிரிவு

அண்ணா பல்கலை. நடத்திய முதற்கட்ட விசாரணையில், 676 பேராசிரியர்கள், ஒரே நேரத்தில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் முழு 2023- 24ஆம் கல்வியாண்டில், நேர பேராசிரியர்களாகப் பணியாற்றியிருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 20க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து இவ்வாறான மோசடியில் ஈடுபட்டிருப்பதும், இவர்கள் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முழு நேரப் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகவும், குறைந்தது கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் இந்த மோசடி நடந்திருப்பதும் இவர்களை தற்போதைக்கு பட்டியலிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.

அண்ணா பல்கலை.யின் இணைப்பு கல்லூரிகளில் பேராசிரியா் நியமன மோசடி குறித்து சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 470-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆதாா் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி பேராசிரியா்கள் சிலா் முறைகேடாக ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணியாற்றிய தகவல்கள் அறப்போர் இயக்கம் மூலம் வெளியாகி சா்ச்சையானது.

இந்த முறைகேட்டில் 800 போ் வரை ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள பேராசிரியா்களை நேரில் அழைத்து விசாரிக்கவும் குழுவினா் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

முதற்கட்டமாக 211 பேராசிரியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை தற்போது 676 ஆக அதிகரித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, கல்லூரிகளில் படித்த மாணவர்களின் நிலை குறித்து கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அண்ணா பல்கலை துணை வேந்தர் ஆர். வேல்ராஜ் கூறுகையில், விசாரணையில், ஒரே ஒரு பேராசிரியர், 22 கல்லூரிகளில் முழு நேர பேராசிரியராகப் பணியாற்றுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு எந்தக் கருணையும் வழங்கப்படாது, இவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் எந்த பொறியியல் கல்லூரியிலும் பணியாற்ற முடியாத வகையில் தடை செய்யப்படும் என்றும் கூறினார்.

நடவடிக்கை எடுக்கும் முன், ஒவ்வொரு பேராசிரியரிடமும் விளக்கம் கேட்கப்படும். இதுபோன்ற பேராசிரியர்களின் பட்டியல்கள் வெளியிடப்பட்டு, கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும். இதுவரை 80 கல்லூரிகள் விளக்கம் அளித்துள்ளன. விளக்கங்களை ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்படும் என்றும் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

SCROLL FOR NEXT