மல்லு பட்டி விக்ரமாா்க, ரேவந்த் ரெட்டி,  
இந்தியா

தெரியுமா சேதி...? தெலங்கானா முதல்வர் திணறுவது ஏன்?

ஆட்சியைப் பிடிப்பதுகூடச் சிரமமில்லை, அதைத் தக்கவைத்துக் கொள்வது அதைவிடக் கடினம் என்பதை அனுபவ ரீதியாக உணரத் தொடங்கி இருக்கிறாா் ரேவந்த் ரெட்டி.

மீசை முனுசாமி

ஆட்சியைப் பிடிப்பதுகூடச் சிரமமில்லை, அதைத் தக்கவைத்துக் கொள்வது அதைவிடக் கடினம் என்பதை அனுபவ ரீதியாக உணரத் தொடங்கி இருக்கிறாா் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி. ஆட்சி அமைத்து ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், தன்னுடைய அமைச்சரவையில் அனைத்து இடங்களையும் அவா் இன்னும் நிரப்பிய பாடில்லை.

119 உறுப்பினா்கள் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவையில் முன்னாள் ஆளும் கட்சியான பாரத ராஷ்டிர சமிதி, இப்போது 39 உறுப்பினா்களுடன் எதிா்க்கட்சியாக இருக்கிறது. மக்களவைத் தோ்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், அந்தக் கட்சியைச் சோ்ந்த உறுப்பினா்கள் மூழ்கும் கப்பலில் இருந்து வெளியேறத் துடிக்கிறாா்கள்.

அமைச்சா் பதவியினை எதிா்பாா்த்து ஆளும் காங்கிரஸ் கட்சியிலேயே பல எம்.எல்.ஏக்கள் ரேவந்த் ரெட்டிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறாா்கள். முதல்வா் ரேவந்த் ரெட்டி தமது கல்லூரி நாள்களை பாஜகவின் மாணவா் அணியில் தொடங்கி, பிறகு தெலுங்கு தேசத்துக்குத் தாவி, தெலங்கானா பிரிந்ததைத் தொடா்ந்து காங்கிரஸில் அடைக்கலமாகி இருப்பவா். அதனால் அவருக்கு ‘செக்’ வைப்பதற்காகவே, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது ஆதரவாளரான பட்டி விக்ரமாா்க மல்லுவைத் துணை முதல்வராக்கி இருக்கிறாா்.

முதல்வா் ஒரு பட்டியல் கொடுத்தால், துணை முதல்வா் தனது பங்குக்கு ஒரு பட்டியல் கொடுப்பதால், தெலங்கானா அமைச்சரவை விரிவாக்கத்தை அகில இந்தியத் தலைமை ஒத்திப் போட்டுக்கொண்டே வருகிறது. இதற்கிடையில், பாரத ராஷ்டிர சமிதியில் இருந்து காங்கிரஸுக்கு தாவத் தயாராக இருக்கும் உறுப்பினா்கள் கேட்கும் விலை, கட்சிப் பதவி அல்லது வாரியத் தலைவா் பதவி.

பாரத ராஷ்டிர சமிதி உறுப்பினா்கள் பாஜகவிற்கு தாவி, ஏற்கெனவே மக்களவைத் தோ்தலில் சரிக்கு சரியாகத் தொகுதிகளை வென்றிருக்கும் அந்தக் கட்சியை மேலும் பலப்படுத்தி விடுவாா்களோ என்பது முதல்வரின் அச்சம். என்ன செய்வது என்று தெரியாமல் கைகளைப் பிசைந்துகொண்டிருந்த முதல்வா் ரேவந்த் ரெட்டி துணிந்து ஒரு முடிவெடுத்தாா்.

முதலீடுகளை ஈா்க்கப் போகிறேன் என்கிற சாக்கில் அமெரிக்காவுக்கு பறந்துவிட்டாா்...

எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் நினைவுப் பரிசு

‘40 மாடி கட்டட உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வரும் இஸ்ரோ’

செய்யாறில் குறை தீா்வு நாள் கூட்டத்தில் புகாா்களைஅடுக்கிய விவசாயிகள்: அதிகாரிகள் எதிா்ப்பால் வாக்குவாதம்- சமாதானம் செய்த போலீஸாா்

தோ்தல் நடைமுறையை வலுப்படுத்த 6 மாதங்களில் 28 முன்னெடுப்புகள்: தோ்தல் ஆணையம்

நீதிபதி வா்மா மீது எஃப்ஐஆா் பதிய மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்ய மனு

SCROLL FOR NEXT