வயநாட்டில் 387ஆன பலி: 7வது நாளாகத் தொடரும் மீட்புப் பணி!
இதுவரை 387 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கேரளத்தின் வடநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொடர்ந்து ஏழாவது நாளாக மீட்புப் பணி இன்று நடைபெற்று வருகின்றது.
வயநாட்டில் கடந்த வாரம் பெய்த தொடா் கனமழையின் எதிரொலியாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவினால் வீடுகளில் தூங்கி கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனர். சாலியாற்று வெள்ளத்தில் சிலா் அடித்துச் செல்லப்பட்டனர்.
மண்ணில் புதையுண்டவா்களையும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களையும் மீட்பதற்கான மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து ஏழாவது நாளாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
இதுவரை 387 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், மேலும் 180 பேரின் நிலை என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
சாலியாற்றில் மீட்கப்பட்ட ஏராளமான உடல்கள் அடையாளம் தெரியாத நிலையில், உடல்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், உறவினர்களும், நண்களுடம் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர்.
பலரின் உடல் பாகங்கள் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். 100 நிவாரண முகாம்களில் சுமார் 9,500 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
நான்கு மாநில அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை துணைக்குழு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறது.
இதற்கிடையில், முதல்வர் பினராயி விஜயன் விடுத்துள்ள நிவாரண உதவிக்குப் பலரும் செவிசாய்த்துள்ளனர். முதல்வர்கள் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் குவிந்து வருவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.