ஷேக் ஹசீனா 
இந்தியா

இந்தியாவில்தான் இருக்கிறார் ஷேக் ஹசீனா..!

வங்கதேச பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா லண்டனில் தஞ்சமடைய முனைப்பு..

DIN

ஷேக் ஹசீனா லண்டன் செல்வதற்கான விசா அனுமதி பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்தில் அரசுக்கு எதிராக வெடித்த பெரும் போராட்டங்களால் பிரதமா் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா(76), லண்டனில் தஞ்சமடையும் திட்டத்தின் ஒரு பகுதியாக தனது சகோதரி ஷேக் ரெஹானாவுடன் நாட்டைவிட்டு வெளியேறி அந்நாட்டின் ராணுவ ஜெட் விமானம் மூலம் தில்லி அருகே உள்ள காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமான தளத்துக்கு நேற்று(ஆக. 5) மாலை 5.45 மணியளவில் வந்தடைந்தார்.

இந்தியாவுக்கு வந்தடைந்த அவரை பாதுகாப்புத் துறையின் ஆலோசகர் அஜீத் தோவல் சந்தித்துப் பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்ற விவரம் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை.

லண்டனில் தஞ்சமடையும் திட்டத்தில் சில சிக்கல்கள் எழுந்ததால், இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா உடனடியாக புறப்படவில்லை என்றும், பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஷேக் ஹசீனா, லண்டன் செல்லும் வரை இந்தியாவில் இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து தில்லிக்குப் பயணித்த வங்கதேச விமானப்படையின் சி-130ஜே ஜெட் விமானம், ஹிண்டன் விமான தளத்திலிருந்து இன்று(ஆக. 6) காலை 9 மணியளவில் அந்நாட்டு ராணுவ வீரர்களுடன் வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விமானத்தை இந்திய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஹிண்டன் விமான தளத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஷேக் ஹசீனா லண்டன் செல்வதற்கான விசா அனுமதி பெறுவதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அந்த விமானத்தில் அவர் செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் சில நாள்கள் அவர் இந்தியாவில் தங்கியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT