நிலச்சரிவு 
இந்தியா

நிலச்சரிவில் காணாமல் போனவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: கேரள அரசு

முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

DIN

கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல் போனவர்களின் முழுமையான பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

கேரளத்தில் வயநாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது. பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிலச்சரிவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்களை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களின் நிலை என்னவென்றே தெரியாமல் தொடர்ந்து எட்டாவது 8வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நிலச்சரிவில் காணாமல் போனவர்களின் சரியான பட்டியல் அரசால் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வருவாய்த்துறை அமைச்சர் கே. ராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மறுவாழ்வு வழங்குவதே அரசின் நோக்கமாகும். நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சூரல்மாலா மற்றும் முண்டக்கய் பகுதிகளை பார்வையிட்ட வயநாட்டில் மறுவாழ்வு திட்டம் முழு உலகிற்கும் முன்மாதிரியாக இருக்கும்.

மேலும் பேரிடரால் ஏற்பட்ட சேதம் மற்றும் இழப்புகள் குறித்து விரைவில்கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT