வங்கதேசத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு சர்வாதிகாரிக்குமான பாடம்: ஃபரூக் அப்துல்லா
வங்கதேச அரசியல் சூழல் குறித்து ஃபரூக் அப்துல்லா கருத்து.
இந்தியாவங்கதேசத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு சர்வாதிகாரிக்குமான பாடம்: ஃபரூக் அப்துல்லா
வங்கதேச அரசியல் சூழல் குறித்து ஃபரூக் அப்துல்லா கருத்து.
வங்கதேசத்தில் நிலவும் போராட்டமானது ஒவ்வொரு சர்வாதிகாரிக்குமான பாடம் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
வங்கதேச விவகாரம் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:
“வங்கதேசத்தின் பொருளாதாரம் மோசமாக உள்ளது, அவர்களின் சூழல் நன்றாக இல்லை. ராணுவம் உள்ளிட்ட யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு இயக்கத்தை மாணவர்கள் முன்னெடுத்தார்கள். இது வங்கதேசத்துக்கு மட்டுமல்ல் ஒவ்வொரு சர்வாதிகாரிகளுக்குமான பாடம். மக்கள் பொறுமையை இழக்கும் காலம் வரும். அதுதான் நடந்துள்ளது.
உலகளவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்ற உணர்வு வங்கதேச மக்களிடையே உள்ளது. ஹசீனா அங்கிருந்து தப்பவில்லை என்றால், அவரும் கொல்லப்பட்டிருப்பார்.” எனத் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் எழுந்த மாணவர்களின் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, திங்கள்கிழமை ராணுவ விமானம் மூலம் இந்தியா வந்தார்.
அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் அவரது குழுவினர் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளதாகவும், லண்டன் செல்வதற்கு ஹசீனாவுக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் புறப்பட்டுச் செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேச நிலவரம் குறித்து மத்திய அமைச்சர்களுடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு ஆலோசனை நடத்திய நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இன்று காலை விளக்கம் அளித்திருந்தார்.