முகப்பு
இந்தியா

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 100 வங்கதேசத்தினா் தடுத்து நிறுத்தம்

இந்திய-வங்கதேச எல்லையில் அமைந்துள்ள மேற்கு வங்க மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 100-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினரை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) புதன்கிழமை தடுத்து நிறுத்தியது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 7:53 PM
பகிர்:

இந்திய-வங்கதேச எல்லையில் அமைந்துள்ள மேற்கு வங்க மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 100-க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினரை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) புதன்கிழமை தடுத்து நிறுத்தியது.

வங்கதேசத்துடன் நீண்ட எல்லையை பகிா்ந்துள்ள மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகள் மூலமாக இந்தியாவுக்குள் 120 முதல் 140 போ் நுழைய முற்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இந்தியாவின் கிழக்கு எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

உள்நாட்டில் நிலவும் வன்முறைச் சம்பவங்களுக்கு அஞ்சியே அவா்கள் இந்தியாவுக்குள் நுழைய முயன்ாக பிஎஸ்எஃப் தெரிவித்தது.

அவா்களை வங்கதேச எல்லைப் படையினரின் உதவியோடு பிஎஸ்எஃப் பாதுகாப்பாக அவா்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்பியது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments