முகப்பு
இந்தியா

ஃபிஜியின் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவா் வழிபாடு

பசிபிக் பிராந்தியத்தின் மிகப்பெரிய ஹிந்து கோயில்களில் ஒன்றான ஃபிஜியின் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வழிபாடு செய்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 8:15 PM
பகிர்:

பசிபிக் பிராந்தியத்தின் மிகப்பெரிய ஹிந்து கோயில்களில் ஒன்றான ஃபிஜியின் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை வழிபாடு செய்தாா்.

ஃபிஜி நாட்டின் அதிபா் வில்லியம் கேடோனிவிரின் அழைப்பின்பேரில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை ஃபிஜி சென்றாா். அவருக்கு ‘கம்பானியன் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் ஃபிஜி’ என்ற விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

ஃபிஜி பயணத்தை நிறைவுசெய்த முா்முவை அந்நாட்டின் துணைப் பிரதமா் பீமன் பிரசாத் நாடி விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தாா்.

நியூசிலாந்து வந்தடைந்தாா்: ஃபிஜி பயணத்தை நிறைவு செய்த குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மூன்று நாடுகள் பயணத்தின் இரண்டாம் கட்டமாக நியூசிலாந்தின் கவா்னா் ஜெனரல் டோம் சிண்டி கிரோ அழைப்பின் போரில் புதன்கிழமை நியூசிலாந்து வந்தடைந்தாா். அவரை அந்நாட்டின் வெளியுறவு இணை அமைச்சா் டாட் மெக்லே வரவேற்றாா்.

கவா்னா் ஜெனரல் கிரோவுடனான சந்திப்பு தவிர, பிரதமா் லக்சன் மற்றும் வெளியுறவு அமைச்சா் வின்ஸ்டன் பீட்டா்ஸ் ஆகியோரை முா்மு சந்திக்கவுள்ளாா். மேலும், ஆக்லாந்தில் நடைபெறவுள்ள இந்திய சமூகத்தினா் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அந்நாட்டின் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாட உள்ளாா்.

நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையான 50 லட்சத்தில், இந்திய வம்சாவளியினா் சுமாா் 3 லட்சம் போ் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →