முகப்பு
இந்தியா

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு ஓவைசி எதிர்ப்பு

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Updated On : 8 ஆகஸ்ட், 2024 at 11:17 AM
கோப்புப்படம்
பகிர்:

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

வக்ஃப் வாரிய அதிகாரங்களை திருத்தம் செய்யும் மசோதாவை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா அரசியலமைப்புக்கு எதிரானது என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பேசினர்.

இதைத் தொடர்ந்து மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்த மசோதாவின் மூலமாக மதத்தால் மக்களை பிரிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து பேசிய அவர், 'இந்த மசோதா அரசியலமைப்பின் பிரிவு 14, 15 மற்றும் 25-இன் கொள்கைகளை மீறுகிறது. இந்த மசோதா பாரபட்சமானது, தன்னிச்சையானது. இதனைக் கொண்டு வந்ததன் மூலம், நீங்கள் (பாஜக அரசு) தேசத்தை பிளவுபடுத்துகிறீர்கள், ஒன்றிணைக்கவில்லை. நீங்கள் முஸ்லிம்களின் எதிரி என்பதற்கு இந்த மசோதா ஒரு சான்று' என்றார்.

முன்னதாக, இந்த மசோதாவுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்திருந்தனர்.

மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →