மும்பையில் லஞ்சம் வாங்கிய அமலாக்கத் துறை உதவி இயக்குநரை சிறப்புப் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர்.
மும்பையில் கடந்த ஆக. 3,4 தேதிகளில் ஒரு நகைக்கடையில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.
ஆனால், சோதனையின் முடிவில், அமலாக்கத்துறையின் உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடையின் உரிமையாளரிடம் ரூ. 25 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
ஆனால், கடையின் உரிமையாளர் லஞ்சம் தர மறுத்ததால், உரிமையாளரின் மகனைக் கைது செய்வதாக, சந்தீப் மிரட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடையின் உரிமையாளர் லஞ்சமாக ரூ. 20 லட்சம் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, நகைக்கடையின் உரிமையாளரிடமிருந்து சந்தீப் லஞ்சம் வாங்கியபோது, சந்தீப்பை சிறப்புப் புலனாய்வுத் துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.