சுனிதா கேஜரிவாலுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு!
இந்தியா கூட்டணித் தலைவர்களைச் சந்தித்து தேர்தல் வியூகங்கள்..
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்திற்குச் சென்று அவரது மனைவி சுனிதா கேஜரிவாலைச் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது மகாராஷ்டிர முன்னாள் முதல்வருடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் சஞ்சய் சிங், ராகவ் சதா ஆகியோரும் உடனிருந்தனர்.
கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.
Advertisement
Advertisement
மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இந்தியா கூட்டணித் தலைவர்களைச் சந்தித்து தேர்தல் வியூகங்களும், முன்னோக்கிச் செல்லும் வழியைப் பற்றியும் விவாதித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.