உச்ச நீதிமன்றம் 
இந்தியா

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

PTI

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தேர்வை ஒத்திவைக்க இயலாது என்று கூறிவிட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மனுவை விசாரித்த நிலையில், தேர்வை ஒத்திவைக்க முடியாது, முதுநிலை தேர்வுக்காக இரண்டு லட்சம் மாணவர்களும் நான்கு லட்சம் பெற்றோரும் காத்திருக்கிறார்கள். ஐந்து மனுதாரர்களுக்காக, 2 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை நிறுத்திவைக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.

நாம் அனைவரும் மிகவும் மாறுபட்ட நாட்டில் வாழ்கிறோம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

முதுநிலை நீட் தேர்வுக்கு ஒரு சில நாள்களே உள்ள நிலையில், அதனை ஒத்திவைப்பது ஏற்புடையது அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

இப்போது நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டுமா? இதுபோன்ற ஒரு தேர்வை எவ்வாறு ஒத்திவைக்க முடியும்? தற்போதெல்லாம் மக்கள் நேரடியாக நீதிமன்றத்துக்கு வந்து தேர்வை ஒத்திவைக்குமாறு கோருகிறார்கள் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதில் பிரச்னை இருந்ததால், தேர்வர்கள் தேர்வு மையத்தை அடைவதில் சிக்கல் ஏற்படும் எனக் கோரி முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகிறது.

இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. இந்த நிலையில், நிகழாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு கடந்த ஜூன் 23-ஆம் தேதி நாடுமுழுவதும் 259 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமாா் 25,000 மருத்துவா்கள் உள்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அதற்கு விண்ணப்பித்திருந்தனா். தோ்வுக்கு முந்தைய நாள் இரவில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது.

ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தோ்வு ஆக.11-ஆம் தேதி காலை, மதியம் என இரண்டு வேளைகளாக நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய புகைப்படம் பதிவு: இளைஞா் கைது

மாணவா்கள் மோதல்: இருவா் காயம்

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

குறுக்குச்சாலையில் தொழிலாளி கொலை

SCROLL FOR NEXT