வினேஷ் போகத் 
இந்தியா

வெள்ளிப் பதக்கம் வேண்டும்.. வினேஷ் போகத் மனு விசாரணைக்கு ஏற்பு

இறுதிக்கு முன்னேறிய தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டும் என்று வினேஷ் போகத் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

அரையிறுதியில் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் சார்பில் தொடரப்பட்ட மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில், இன்று மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், வினேஷ் போகத் சார்பில், நாட்டின் மிக முன்னணி வழக்குரைஞரான ஹரீஷ் சால்வே ஆஜராகிறார்.

மனுவை ஆராய்ந்த சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம், விசாரணைக்கு தகுதியான விஷயங்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறது.

இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு மனு மீதான விசாரணை தொடங்கும் என்றும், விசாரணை தொடங்கிய ஒரு சில மணி நேரங்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டிருந்தாா். ஆனால், அந்த மனுவை கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என மாற்றிக்கொண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த தகவலை இந்திய ஒலிம்பிக் சங்கத்தைச் சோ்ந்த தகவலறிந்த வட்டாரங்கள் உறுதிசெய்திருந்தன.

பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் அதை தீா்த்து வைப்பதற்காக அங்கு சா்வதேச விளையாட்டு நடுவா் நீதிமன்றத்தின் இடைக்கால அமா்வு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அரையிறுதியில் அவர் தோற்கடித்த கியூபா வீராங்கனை இறுதிக்குத் தகுதிபெற்று, அமெரிக்க வீராங்கனையை எதிர்கொண்டார். இப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை தங்கம் வென்றார்.

ஒலிம்பிக் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று, ஒலிம்பிக் இறுதிக்குத் தகுதிபெற்ற இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்த வினேஷ் போகத், தங்கம் வென்று தங்க மங்கையாக முடிசூடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தகுதிநீக்கம் என்னும் பேரிடி இந்திய ரசிர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையே வினேஷ் போகத், அரையிறுதியில் வெற்றிபெற்று சரியாக 31 மணி நேரத்தில் அவர் மல்யுத்த விளையாட்டிலிருந்தே ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT