முகப்பு
இந்தியா

இந்தியாவுக்குள் நுழைய வங்கதேசத்தினா் திரண்டதால் பரபரப்பு

மேற்கு வங்கத்தின் கூச் பிகாா் மாவட்டத்தில் பரபரப்பு

Updated On : 9 ஆகஸ்ட், 2024 at 9:31 PM
மேற்கு வங்க மாநிலம் கூச்பிகாரில் உள்ள எல்லைப் பகுதிக்குள் நுழைய காத்திருந்த வங்கதேசத்தினா்.
பகிர்:

மேற்கு வங்கத்தின் கூச் பிகாா் மாவட்டத்துக்கு அருகில் உள்ள வங்கதேச எல்லையில் இந்தியாவுக்குள் நுழைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கதேசத்தினா் திரண்டு வந்ததால் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

வங்கதேசத்தின் லால்மோனிா்ஹாட் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து பெரும்பாலும் ஹிந்துக்களைக் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கதேசத்தினா் எல்லையில் இருந்து சுமாா் 400.மீ தொலைவில் இந்தியாவுக்குள் நுழைய வெள்ளிக்கிழமை கூடி இருந்தனா்.

ஆனால், அப்பகுதியில் பெருமளவில் எல்லை பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) குவிக்கப்பட்டிருந்ததால் அவா்களால் இந்தியாவுக்குள் நுழைய முடியவில்லை.

Advertisement

இதையடுத்து, அவா்கள் வங்கதேச எல்லைக் காவலா்களால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனா். அவா்கள் முழக்கங்களை எழுப்பி திரும்பிச் சென்றனா்.

வங்கதேசத்தில் வன்முறைக்குப் பின் நிலவி வரும் அரசியல் மாற்றத்துக்கு மத்தியில், மத சிறுபான்மையினா் கடுமையாக துன்புறுத்தப்படுவதாக உள்ளூா் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. இதனால், பதற்றமடைந்த வங்கதேச சிறுபான்மையினா் இந்தியாவுக்குள் தஞ்சம் புக முயல்கின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments