இந்தியா

இந்தியாவில் பெரிய சம்பவம் இருக்கு: எச்சரிக்கும் ஹிண்டன்பர்க் ரிசர்ச்

ஹிண்டன்பர்க் ரிசர்ச் பதிவிட்டுள்ள இந்தியா குறித்த எக்ஸ் பதிவு உலகளவில் பேசுபொருளாகி உள்ளது

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியாவில் ஏதோ ஒன்று நடக்கப் போவதாக, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், தனது எக்ஸ் பக்கத்தில் `இந்தியாவில் பெரியதாக ஒன்று நடக்கவுள்ளது’ என்று இன்று காலையில் பதிவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஹிண்டன்பர்க்கின் இந்த எக்ஸ் பதிவு உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் பெரு நிறுவனங்களில் நிகழும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்கிறது.

ஏதேனும் குறிப்பிட்ட ஒரு நிறுவனம் குறித்த ஆய்வுக்குப் பிறகு, தனது வலைத்தளம் வழியாக, அந்த நிறுவனத்தின் மோசடிகள் மற்றும் முறைகேடுகளைக் குறித்த அறிக்கைகளை வெளியிடும்.

இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.

ஹிண்டன்பர்க், கடந்தாண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவின் அதானி குழுமத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அறிக்கை வெளியிட்டது.

அதானி குழுமம் பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி, அதன் மூலம் அதிகக் கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அறிக்கையில் தெரிவித்தது.

இந்தியக் கூட்டு நிறுவனமான அதானி, பல ஆண்டுகளாக பங்கு முறைகேடு மற்றும் கணக்கியல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது என்றும் கூறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியான உடனேயே, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் சரிவை சந்தித்தன.

இதனையடுத்து, அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் கூற்றுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுத்தது.

ஆனால், தங்களது இந்த அறிக்கை தவறானது என்று கருதினால், அதானி குழுமம் தங்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் அழைப்பும் விடுத்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்ணை அவதூறு செய்தவா் கைது

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

சென்னை மாநகரப் பகுதிகளில் மின் விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

சிபிஎஸ்இ மண்டல இயக்குநா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

போலீஸாரிடம் தகராறு செய்த கைதிகள் மீது 8 பிரிவுகளில் வழக்கு

SCROLL FOR NEXT