கோப்புப்படம் 
இந்தியா

ராஜஸ்தான்: ஆற்றில் குளிக்கச் சென்ற 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி

ராஜஸ்தானின் பரத்புரில் ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் குளிக்கச் சென்ற 3 உறவினர்கள் உட்பட 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.

DIN

ராஜஸ்தானின் பரத்புரில் ஞாயிற்றுக்கிழமை ஆற்றில் குளிக்கச் சென்ற 3 உறவினர்கள் உட்பட 7 இளைஞர்கள் நீரில் மூழ்கி இறந்தனர்.

ஸ்ரீநகர் கிராமத்தைச் சேர்ந்த 8 இளைஞர்கள் பங்கங்கா ஆற்றில் குளிக்கச் சென்றனர். ஆழமான நீரில் மூழ்கி ஒன்றன் பின் ஒன்றாக அவர்கள் இறந்தனர்.

"மூன்று உறவினர்கள் உட்பட ஏழு இளைஞர்கள் ஆழமான நீரில் மூழ்கி இறந்தனர், ஒருவர் தப்பினார் என்று பல்ராம் யாதவ் கூறினார்.

உயிர் பிழைத்த இளைஞர் கிராமத்திற்குச் சென்று சம்பவம் குறித்து தெரிவித்தார். கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை கைப்பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இறந்தவர்கள் பவன் சிங் ஜாதவ் (20), சௌரப் ஜாதவ் (18), மற்றும் கௌரவ் ஜாதவ் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் உறவினர்கள். மேலும் பூபேந்திர ஜாதவ் (18), சாந்தனு ஜாதவ் (18), லக்கி ஜாதவ் (20) மற்றும் பவன் ஜாதவ் (22) ஆவர்.

இறந்த இளைஞர்கள் அனைவரும் உறவினர்கள் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். உடற்கூராய்வுக்குப் பின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் அக்கிராமத்தில் சோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT