கொல்கத்தாவில் மருத்துவ மாணவிகள் போராட்டம். ANI
இந்தியா

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை: பொதுநல மனு தாக்கல்

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்.

DIN

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்யப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை(ஆக.8) இரவுப் பணிக்கு வந்த பெண் பயிற்சி மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களின் போராட்டதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி தலைவர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, மேற்கு வங்க பாஜக தலைவரும், கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான கவுஸ்தாவ் பாக்சி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

மேலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், ஓய்வு அறைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

முன்னதாக, பெண் மருத்துவர் கொலை வழக்கில் எவ்வித குறுக்கீடுகளுமின்றி முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்தவும் மாநில அரசுக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT