இந்தியா

பாலியல் வன்கொடுமை முயற்சி செய்த சமாஜவாதி கட்சியின் முன்னாள் பிரமுகர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் அதிகாலை 1.30 மணியளவில் சமாஜவாதி கட்சியின் முன்னாள் பிரமுகர் நவாப் சிங் யாதவ், பாலியல் வழக்கில் கைது

இணையதளச் செய்திப் பிரிவு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சமாஜவாதி கட்சியின் முன்னாள் பிரமுகர் நவாப் யாதவ் சிங் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் கன்னௌஜ் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி, தனது அத்தையுடன், சமாஜவாதி கட்சியின் முன்னாள் பிரமுகர் நவாப் சிங் யாதவின் வீட்டிற்கு வேலைக்காகச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில், சிறுமியின் அத்தை வெளியே சென்றிருந்த நேரம், சிறுமியை நவாப் சிங் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் அத்தை, திரும்பி வந்து பார்த்தபோது, நவாப் சிங் உள்ளாடை மட்டும் அணிந்திருப்பதைக் கண்டு, சிறுமியை நவாப் பாலியல் துன்புறுத்தல் செய்ய முயன்றதை அறிந்தவுடனேயே, அதிகாலை 1.30 மணியளவில் அவசர எண்ணான 112 ஐ தொடர்புகொண்டு, காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அரை நிர்வாணமாக இருந்த நவாப் யாதவை போக்ஸோ வழக்கில் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால், உத்தரப்பிரதேசத்தில் சமாஜவாதி கட்சிக்கும், ஆளுங்கட்சியான பாஜகவுக்கும் இடையே மோதல் உண்டாகியுள்ளது.

இந்த நிலையில், நவாப் யாதவின் செயலுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சமாஜவாதி கட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, 5 ஆண்டுகளாக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, நவாப் யாதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து விட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

இதுகூட தெரியாமல் எப்படி ஒரு கட்சித் தலைவராக இருக்க முடியும்? விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பதில்

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

SCROLL FOR NEXT