கைது செய்யப்பட்ட பில்லா ஹவேலியன் என்றழைக்கப்படும் பல்விந்தர் சிங் 
இந்தியா

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் பில்லா ஹவேலியன் கைது!

பஞ்சாபைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் பில்லா ஹவேலியன் இன்று கைது செய்யப்பட்டார்.

DIN

பஞ்சாபைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் பில்லா ஹவேலியன் என்றழைக்கப்படும் பல்விந்தர் சிங் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டார்.

சிறைகளில் உள்ள போதைப்பொருள் மாஃபியாக்களின் இணைப்பைத் துண்டிக்கும் விதமாக பஞ்சாப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநில தார்ன் தரன் மாவட்டத்தின் ஹவேலியன் கிராமத்தைச் சேர்ந்த பல்விந்தர் சிங் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாகவும், பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரிகளுடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், போதைபொருள் கடத்தல் தொடர்பாக இவர் மீது 10 -க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

பல்விந்தர் சிங் அஸ்ஸாமில் உள்ள திப்ருகர் சிறையில் அடைக்கப்படுவார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பஞ்சாப் காவல்துறை மற்றும் என்.சி.பி. இணைந்து நடத்திய நடவடிக்கையில் குருதாஸ்பூரில் பல்விந்தர் சிங் கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கவுரவ் யாதவ் தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தொடர் குற்றங்களில் ஈடுபடும் ஒருவரை ஒரு ஆண்டு காலத்திற்கு ஜாமீனில் வெளிவரமுடியாதபடி காவலில் வைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சியில் பரவலாக மழை

ஹூப்ளி-காரைக்குடிக்கு ஆக.14-ல் சிறப்பு ரயில்

இந்திய விமானங்களுக்கான தடையால் பாகிஸ்தானுக்கு ரூ.410 கோடி இழப்பு!

வைகை அணையிலிருந்து 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை

மாநகராட்சி ஆணையா் இல்லம் முன் போராட்டம்! 25 போ் கைது!

SCROLL FOR NEXT