முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: ராணுவ கேப்டன் வீர மரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார்.

Updated On : 14 ஆகஸ்ட், 2024 at 3:11 PM
ஜம்மு-காஷ்மீர் துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ கேப்டன் தீபக் சிங். - dotcom
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ கேப்டன் வீர மரணம் அடைந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டம் ஷிவ்கர்க் - அஸார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்து பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

Advertisement

இதில் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீர மரணம் அடைந்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

'அஸார் பகுதியில் நடைபெற்ற சண்டையில் 48 ராஷ்ட்ரிய ரைபிள் பிரிவைச் சேர்ந்த ராணுவ கேப்டன் தீபக் சிங் வீர மரணம் அடைந்தார். அப்பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது' என்று கூறியுள்ளது.

மேலும் தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.